05th July 2023 20:53:15 Hours
சீன பௌத்த சமூகத்தின் அனுசரணையுடன் 24 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தினரால் தலா 5100/= ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பொதிகள் அம்பாறை மஹாஓயா, பண்டாரதுவ மற்றும் கோனகொல்ல பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு ஸ்ரீ ஞானவிஜயலோக விகாரை, ஸ்ரீ கௌதம விகாரை மற்றும் ஸ்ரீ விமலாராம விகாரைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) வரவழைத்து விநியோகிக்கப்பட்டன.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதியின் ஒருங்கிணைப்பின் மூலம் இவ் விநியோக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
திரு நிஷாந்த விதாரண மற்றும் திரு உதய கருணாரத்ன ஆகியோர் இம் மூன்று விகாரைகளின் தேரர்களின் ஆசியுடன் சீன உதவிக்கு ஒருங்கிணைப்பை வழங்கினார்.
விநியோக நிகழ்ச்சியின் போது 24 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் உடனிருந்தனர். 16 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி இத்திட்டத்தின் நிருவாக அம்சத்திற்கு ஆதரவளித்தார்.
241 காலாட் பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோக திட்டத்தில் பங்குபற்றினர்.