03rd April 2023 18:11:01 Hours
கொழும்பு 7 இல் உள்ள சீஆர் மற்றும் எப்சீ மைதானத்தில் ஏப்ரல் 1 முதல் 2 வரை நடைபெற்ற சீஆர் மற்றும் எப்சீ நூற்றாண்டு 7 போ் ரக்பி போட்டியில் இராணுவ ஆண் மற்றும் பெண் ரக்பி வீரர்கள் தங்களது உயர் செயல்திறன் மற்றும் விதிவிலக்கான விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தினர்.பாடசாலை அணிகள் மற்றும் வெளிநாட்டு அணிகள் (ஆவுஸ்திரேலியா மற்றும் டோஹா கத்தார்) உட்பட முன்னணி ரக்பி கழகங்களின் பங்கேற்புடன் ரக்பி போட்டி இடம்பெற்றது.
இலங்கை இராணுவ ஆண்கள் அணி இலங்கை பொலிஸ் அணியை தோற்கடித்து சாம்பியனை வென்றதுடன், இலங்கை இராணுவ மகளிர் அணி அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.