Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2024 20:13:11 Hours

சிறப்பு காலாட் நடவடிக்கை பயிற்சி பாடநெறி – 74 மாதுருஓயாவில் நிறைவு

சிறப்பு காலாட் நடவடிக்கை பயிற்சி பாடநெறி – எண் 74 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் திங்கட்கிழமை (ஜனவரி 15) வண்ணமயமான விடுகை அணிவகுப்பு மற்றும் சின்னங்கள் வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

இப் பாடநெறி 20 நவம்பர் 2023 முதல் 15 ஜனவரி 2024 வரை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 24 அதிகாரிகள் மற்றும் 155 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.

காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் பிரதம அதிதியாக பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

ஏழு கட்டங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறன் கொண்ட பயிற்சியின் பெறுபேறுகள் பின்வருமாறு:

சிறந்த அதிகாரி – லெப்டினன் என்எம்எஸ்எச் நிகலன்சூரிய – விஜயபாகு காலாட் படையணி

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் -கெப்டன் என்டி ராஜபக்ஷ - இலங்கை சிங்க படையணி

சிறந்த உடற்தகுதி - லான்ஸ் கோப்ரல் டப்ளியூஎம்எல்யூகே வீரசிங்க - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

சிறந்த சிப்பாய் - கோப்ரல் எஸ்ஏகேடி கங்கநாத் - விஜயபாகு காலாட் படையணி

சிறந்த பிரிவு – 5 வது விஜயபாகு காலாட் படையணி