இராணுவத்தின் கடந்த கால தடகளத் துறையில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் ஒருவரும், தற்போது ஓய்வு பெற்றவருமான தேசபந்து லெப்டினன்ட் கேணல் டபிள்யூ விமலதாச (ஓய்வு) அவர்கள் அல்வ்வ ஆண்டியதெனியவில் முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தனது வீட்டின் சாவியை புதன் கிழமை (31) லெப்டினன்ட் கேணல் தேசபந்து டபிள்யூ விமலதாச (ஓய்வு) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, பதக்கச் சாதனையைப் பெற்று இராணுவத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்திய மூத்த வீரராக நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டு வீரர்களின் இதயங்களில் நன்கு பதிந்துள்ளார். 11.5 வினாடிகளில் 100 மீ ஓட்டத்தையும், தெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். அவர் 4 x 400 மீ தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்று இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை எடுத்துச் சென்றார். அவரது சாதனைகளைப் பாராட்டும் வகையில், இலங்கை இராணுவம் லெப்டினன்ட் கேணல் விமலதாசவுக்கு (ஓய்வு) இராணுவ மற்றும் தேசிய வண்ணங்களை வழங்கியது.
அவரது படையணியான கெமுனு ஹேவா படையினர் அவரது இருப்பிடம் தங்குவதற்கு உரிய முறையில் இல்லாதமை குறித்து அறிவிக்கப்பட்டமையை அடுத்து கெமுனு ஹேவா படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் விதானகே மற்றும் இராணுவ படைவீரர் விவகார பணிப்பாளர் அலுவலகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன், 4.5 இலட்சம் ரூபாவை திரட்டி, வீட்டை முழுமையாக புனரமைத்தார். குருவிட்ட, கெமுனு ஹேவா படையணி தலைமையக படையினரின் தீவிர ஆதரவுடன் மூன்று வாரங்களில் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
அனைத்துப் படைப்பிரிவுகளும் தங்கள் படைவீரர்களைப் பாராட்டி அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தளபதியின் வழிகாட்டுதலின்படி வீடு புனரமைப்புச் செய்யப்பட்டது, புனரமைப்புச் செயல்பாடு கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதியால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் உபுல் விதானகே புதன்கிழமை (31) புனரமைக்கப்பட்ட வீட்டின் சாவியை சம்பிரதாயபூர்வமாக மூத்த விளையாட்டு வீரருக்கு வழங்கியதுடன், சுருக்கமான விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார்.
கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எச்என் ஹலங்கொட (ஓய்வு), பிரதி நிலையத் தளபதி, ரணவிரு அப்பேரல்ஸ் கட்டளை அதிகாரி, மற்றும் அழைப்பாளர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்..