02nd February 2024 16:07:52 Hours
அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி’ பாடநெறி - 49 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 ஜனவரி 31 ம் திகதியன்று வெற்றிகரமாக முடிவடைந்தது.
அதன்படி, அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்ற ஒரு மாத கால பாடநெறியில் 46 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர். இப்பயிற்சியில் 5 வது (தொ) கஜபா படையணியின் சார்ஜன் ரந்தெனிய ஆர்ஜிஆர்என் அவர்கள் பாடநெறியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டார்.
மேற்படி தொழில் அபிவிருத்தி பாடநெறி 2024 ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் 2024 ஜனவரி 31 ஆம் திகதி நிறைவுற்றது. இந் நிகழ்வில் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்த கொண்டனர்.