28th July 2023 19:24:14 Hours
புத்தள இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி – 08 இன் பயிற்சியாளர்கள், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொழும்புக்கான ஆய்வுப் பயணத்தை ஜூலை 10 - 12 வரை மேற்கொண்டனர்.
ஆய்வுப் பயணத்தின் முதல் நாள் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், இராணுவப் போர்க் கல்லூரியின் பிரதிநிதிகள், இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட நியமனம் பெற்றவர்கள் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பதவி நிலைப்பிரதானியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அடுத்த நாள், மாணவ அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை விவகாரங்கள் மற்றும் இலங்கை கடற்படையின் செயற்பாடுகள் மீதான தாக்கங்கள் பற்றிய செயலமர்வில் பங்குபற்றினர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான விஜயத்தில், இயற்கை அனர்த்தங்களை நிர்வகிப்பதற்கும் அவ்வாறான சூழ்நிலைகளில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தலைமையகத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிவை பெற்றுக் கொண்டனர்.
இரண்டாம் நாளின் பிற்பகுதியில் இரத்மலானை விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்து இலங்கை விமானப்படையின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டதுடன், மாணவ அதிகாரிகள் இலங்கை விமானப்படையின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக செயற்பாடுகள் பற்றிய அறிவை மேம்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.
இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் பிரதம பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 08ன் அனைத்து மாணவ அதிகாரிகளும் பயணத்தில் பங்குபற்றினர்.