Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2024 18:21:34 Hours

"சாஹித சன்ஹித" எனும் புதிய நூலகம் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரால் திறப்பு

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், "சாஹித சன்ஹித" என்ற பெயரிடப்பட்ட புதிய நூலக வசதி சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வ திறப்பு விழா 12 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. இந்த நூலகம் ஒரு நவீன நூலக முகாமை அமைப்புடன் அனைத்து பயனர்களுக்கும் வளமான வளத்தை உறுதியளிக்கிறது.

இந்நிகழ்வின் போது, அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு நூலக வசதியை பார்வையிட வாய்ப்பு கிடைத்ததுடன் விழாவின் போது, திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அனைத்து நிலையினருக்கும் உரை நிகழ்த்தினார். தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்திய அதேவேலை மன அமைதி மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதில் அதன் பங்கை எடுத்துரைத்தார்.