Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2024 09:05:40 Hours

சாவகச்சேரியில் இராணுவத்தினால் நிர்மாணித்த வீட்டை 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பயனாளியிடம் ஒப்படைப்பு

யாழ். பாதுகாப்புப் படையினரின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாவகச்சேரி, நுணாவில் மேற்குப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை, 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி பயனாளியிடம் ஒப்படைத்தார்.

சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் காலாட் படைப்பிரிவு தளபதி பயனாளியிடம் வீட்டை கையளித்தார். இந்த புதிய வீடு 11 வது களப் பொறியியல் படையணி படையினரால் யாழ். பாதுகாப்புப் படையின் 52 வது காலாட் படைப்ப்பிரிவு தளபதியின் வழிகாட்டல் மற்றும் 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்.எம்.சீ.ஏ.எஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷட்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.