Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2024 15:27:50 Hours

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படை பாடநெறி (அதிகாரிகள்) – இல 34 நிறைவு

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனதின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படை பாடநெறி (அதிகாரிகள்) - இல34 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 07 மார்ச் 2024ம் திகதி இலங்கை அமைதி ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூஎச்.ஆர்.ஆர்.வீ.எம்.என்.டிகே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பாடநெறி 19 பெப்ரவரி 2024 முதல் 07 மார்ச் 2024 வரை நடாத்தப்பட்டது. இந்த பாடநெறியானது முப்படையைச் சேர்ந்த 37 அதிகாரிகளையும் ஒரு விஷேட அதிரடிப்படை அதிகாரியையும் கொண்டிருந்தது.

மனித உரிமைகள், மனிதாபிமான சட்டம் மற்றும் அவற்றின் நிஜ உலக தாக்கங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப் பாடநெறியின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கான திறமையான அதிகாரி பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், ஒவ்வொரு பங்கேற்பாளரின் கட்டளையிடல் திறன்களை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆயுதம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் திட்ட ஆலோசகர் மற்றும் வருகை தரு நிபுணர்களால் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனதின் தளபதி மேஜர் ஜெனரல் சீ ஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட பணிப்பக பணிப்பாளர் கேணல் என் எஸ் நல்லபெரும யுஎஸ்பீ என்டிசி மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.