17th May 2024 15:45:34 Hours
சட்ட சேவைகள் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம் 2024 மே 15 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பு அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் திட்ட ஆலோசகர் திரு.சன்ன ஜெயவர்தன அவர்கள் நடாத்தியதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 12 சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பு அதிகாரிகள் தங்கள் அறிவைப் குறிப்பாக தற்போதைய சூழலில் "சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் இராணுவம்" என்ற தெனிப்பொருளில் புதுப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அதே சமயம், பனாகொடை இராணுவ வளாகத்தில் பணிபுரியும் 94 பொறியியல் படையணி சிப்பாய்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.