14th July 2023 21:47:16 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையலகுகளுக்கிடையேயான அணிநடைப் போட்டி - 2023 செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) அன்று சந்துன்புர 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியில் இரண்டு குழுக்கள் போட்டியிட்டன.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கணைகள் ஒரு குழுவாகவும் 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கணைகள் ஒரு குழுவாகவும் இரண்டு குழுக்கள் போட்டியில் பங்குபற்றினர்.
இறுதியில் 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கணைகள் போட்டியில் சாம்பியனாக தெரிவாகினர்.
7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லெப்டினன்ட் டிஏடிஎன் தீரசிங்க சிறந்த கட்டளையாளருக்கான விருதையும், அதிகாரவாணையற்ற அதிகாரி II பி. ஹெலன் சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளர் விருதையும் பெற்றனர்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.