12th April 2023 21:45:00 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் 523 வது காலாட் பிரிகேடின் 11 வது களப் பொறியியல் படையினர், சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியை தூய்மை செய்யும் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதி முன்னெடுத்தனர்.
11 வது இலங்கை களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஜிசிகே குடகமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஓர் அதிகாரி மற்றும் 10 சிப்பாய்களைக் கொண்ட குழு திட்டத்திற்கு பங்களித்ததுடன், மாசு மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
இந்தத் திட்டம் 11 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 112 வது படையலகின் கட்டளையாளர் கெப்டன் ஜாலிய ஜயவீர அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.