Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2023 22:40:21 Hours

சக படையினரால் தமிழ் பெண் சிப்பாய்க்கு வீடு

24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேட்டினர் தம்முடன் பணிபுரியும் பெண் சிப்பாய் ஒருவருக்கு தமது ஒற்றுமையையும் தோழமையையும் வெளிப்படுத்தும் வகையில் அக்கரைப்பற்றில் தீயினால் முற்றாக அழிந்துபோன அவரது வீட்டைப் புனரமைத்து வழங்கினர்.

கோரிக்கையின் பேரில், அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் வர்த்தக சமூகங்களின் நன்கொடையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

24 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் பயணாளியான 3 வது (தொ) இராணுவ மகளிர் படையணியின் தமிழ் பெண் பெண் சிப்பாய் டிரோனா டி அவர்களின் வீடு தீயினால் பெரும் சேதம் அடைந்திருந்தது.

241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் முன்முயற்சியுடன், 11வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் முயற்சியுடனும் மேற்கூறிய சமூகங்களின் 842,754.00 ரூபா பெறுமதியான நிதியுதவியுடன் வீட்டின் வெற்றிகரமான புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புதிதாக புனரமைக்கப்பட்ட வீட்டை 24 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை (20) திறந்து வைத்ததுடன் வீட்டின் சாவியை பெண் சிப்பாய் மற்றும் அவரது பாட்டியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

இதேவேளை, பிரதம அதிதியால் குடும்பத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பனவும் அன்பளிப்பு செய்யப்பட்டன.