19th February 2024 19:13:30 Hours
ஜேர்மனியைச் சேர்ந்த 76 வயதான சுற்றுலாப் பயணியான திரு. ஜோசப் பேன்னர் புதன்கிழமை (2024 பெப்ரவரி 14) மாலை கொஸ்லந்த பகுதியில் காணாமல் போனார், மேலும் ஹப்புத்தளை மெல்ஹெய்ம் ரிசோர்ட் நிர்வாகம், நடை மற்றும் சூழலை ரசிப்பதற்காக விடுதியை விட்டு வெளியேறி காணாமல் போன ஜேர்மன் விருந்தினரை மீட்பதற்காக இராணுவத்தின் உதவியைக் நாடியது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் படையினர் காணாமல் போன சுற்றுலாப் பயணியைக் கண்டுபிடித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்ய விரைந்தனர். அதன்படி, குறைந்த வெளிச்சம் மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியில் சுற்றுலா பயணியை காப்பாற்ற இரண்டு அதிகாரிகள் மற்றும் பதினான்கு சிப்பாய்களை உள்ளடக்கிய மீட்பு குழு ஒன்று சென்றது.
மறுநாள் அதிகாலையில், படையினர் சுற்றுலாப் பயணியைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக அவரது விடுதிக்கு அழைத்து சென்றனர். ஜேர்மன் நாட்டவர் இராணுவத்தின் அர்ப்பணிப்பை மிகவும் பாராட்டியதுடன் மற்றும் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.