Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2024 18:31:33 Hours

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் புற்றுநோய் தடுப்பு தொடர்பான செயலமர்வு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் 'ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்' எனும் தொனிப்பொருளில் 'புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது' தொடர்பான செயலமர்வு கொழும்பு இராணுவ மருத்துவமனை மற்றும் இராணுவத் தலைமையகத்தின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் படையினருக்கு 16 மார்ச் 2024 அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வு கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் உடல் கூற்று வைத்திய நிபுணர் பிரிகேடியர் ஜீஎம் ஜயவீர அவர்களின் மேற்பார்வையில் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் மேஜர் எல்.ஐ. மாதுலுவாகே அவர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் 10 அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.