12th July 2024 15:02:35 Hours
கொழும்பு இராணுவத் தள வைத்தியசாலை 10 ஜூலை 2024 அன்று இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் "ஆரோக்கியமான இராணுவ ஆரோக்கியமான தேசம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது. மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணத்தைத் தடுத்தல், ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து, புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மன அழுத்த முகாமை நுட்பங்கள் உள்ளிட்ட முக்கியமான சுகாதார தலைப்புகளில் படையினருக்கு கல்வி கற்பிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொணடிரஞந்தது.
பிரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ். எம் விஜேவர்தன யூஎஸ்பீ, லெப்டினன் கேணல் (வைத்தியர்) பி.எல் ரணசிங்க கேஎஸ்பீ, மேஜர் ஏ.சி.கே உடுகம மற்றும் மேஜர் பீ.ஏ.சி.பீ.கே பேதுருஆராச்சி ஆகியோர் அமர்வுகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் முந்நூறு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.