Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2019 22:41:59 Hours

கொழும்பில் உள்ள இராணுவ குடியிருப்பு விடுதிகளை பார்வையிடுவதற்கு பிரதி பதவி நிலை பிரதானி வருகை

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கொழும்பில் உள்ள இராணுவ குடியிருப்பு விடுதிகளை சென்று நேரடியாக இம்மாதம் (16) ஆம் திகதி பார்வையிட்டார்.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய பிரதி பதவி நிலை பிரதானி கொழும்பு மற்றும் பனாகொட பிரதேசங்களில் உள்ள இராணுவ குடியிருப்பு விடுதிகளான சுமிட் ப்ளட்ஷ், மெனிங்டவுன், கெந்தலந்த, கொகுவல, அன்டர்ஷன் ப்ளட்ஷ், காக்கைதீவு, பிடிபன, பனாகொட, ருக்மள்கம, மத்தேகொட, பானலுவையில் உள்ள விடுதிகளை சென்று பார்வையிட்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டு அதற்கான வழிமுறைகளை வகுத்து வழங்கினார்.

இராணுவத்திலுள்ள 150 படையினர்களின் பங்களிப்புடன் இந்த விடுதிகள் மீள் புணரமைக்கும் பணித் திட்டங்கள் இப்பொழுது இராணுவ விடுதி மற்றும் விநியோக பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

மேலும் இந்த இராணுவ விடுதிகளை பார்வையிடுவதற்கு இராணுவ விடுதி மற்றும் விநியோக பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, இராணுவ பொறியியலாளர் சேவைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ரத்னசிரி கனேகொட, படைக்கலச் சிறப்பணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் ஜி.டீ சூரியபண்டார மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த சமயத்தில் இந்த விடுதிகள் மீள் நிர்மானிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக 1 ஆவது இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஆசிரி முகந்திரம் அவர்கள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானிக்கு விளக்கங்களை தெளிவூட்டி வைத்தார். jordan Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people