24th October 2023 10:36:10 Hours
கொலன்னாவ பிரதேசத்தில் தகுதியான 216 குடும்பங்களுக்கு 432 பால்மா பொதிகள் புதன்கிழமை (ஒக்டோபர் 18) மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தில் சேவையாற்றும் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் பொன்டெரா நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன.
கொலன்னாவ பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பொன்டெரா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர், 144 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடும்பங்களின் உறுப்பினர்கள் சுருக்கமான நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.