12th March 2024 17:03:54 Hours
கொமாண்டோ படையணியில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காற்று துப்பாக்கி சூட்டு திடல் மற்றும் டென்னிஸ் மைதானம் கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் தலைமையில் 2024 பெப்ரவரி 29 ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், உடற்பயிற்சி கூடத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜக்குஸி, சோனார் பாத் மற்றும் நீராவி குளியல் வசதிகளை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது கொமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.