Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2023 22:14:23 Hours

கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை படையினரால் தீ அணைப்பு பணி

வெல்லவாய கொடிகம்பொக்க, தித்தமுலகந்த வனப் பகுதியில் 21 ஓகஸ்ட் 2023 மாலை சுமார் 5.50 மணியளவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீ குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் படையினரால் அணைக்கப்பட்டது.

கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் ஒரு அதிகாரி மற்றும் 25 படையினரால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நில பரப்பில் பரவிய காட்டுத் தீ தாவரங்களை பாதிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டது.

கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி, பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.