Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2024 13:57:24 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் டிசம்பர் மாத பொதுக்கூட்டம்

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் டிசம்பர் மாத பொதுக்கூட்டம் 2024 டிசம்பர் 01 அன்று கனேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தில் முந்தைய நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு இலஞ்சினையை திருத்துதல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் மற்றும் ஜனவரியில் ஆண்டு மாதாந்த பொதுக்கூட்டம் திட்டமிடல் என்பன இடம்பெற்றது.

அதே நாளில், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கொமாண்டோ படையணி தலைமையகத்தில் ஒரு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பண்டிகை உணர்வை வளர்க்கும் நோக்கில் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மரம் அலங்கார அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றைய நிகழ்வுகளுடன் சேர்த்து, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் வாப்பிள் தயாரித்தலுடன் மாலை தேநீர் விருதும் இடம்பெற்றது. இது உறுப்பினர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது.

இநநிகழ்வில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் பங்குபற்றினர்.