Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th February 2025 21:52:11 Hours

கெமுனு ஹேவா படையினருக்கான அமைதிகாக்கும் படை குழுவின் முன்-பணியமர்த்தல் பாடநெறி எண் 6 – நிறைவு

கெமுனு ஹேவா படையினருக்கான அமைதிகாக்கும் படை குழுவின் முன்-பணியமர்த்தல் பாடநெறி எண்-6 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி நிறைவடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை மற்றும் தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் பற்றிய அடிப்படை அறிவை மேம்படுத்துவதற்காக, 41 அதிகாரிகள் மற்றும் 291 சிப்பாய்களின் பங்கேற்புடன் 2025 ஜனவரி 20 ஆம் திகதி இந்தப் பாடநெறி ஆரம்பமாகியது.

ஐ.நா. அமைதி காக்கும் அறிமுகம், சூழ்நிலை பயிற்சி, சர்வதேச மனிதாபிமான சட்டம் & மனித உரிமைகள், களப் பயிற்சி போன்ற பல முக்கிய அம்சங்களை இந்தப் பாடத்திட்டம் உள்ளடக்கியிருந்தது.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.எல்.ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் இறுதி உரையை ஆற்றினார்.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.