Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2025 08:33:26 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் போர்வீரர்கள் குடும்பங்களுக்கு வைத்திய முகாம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (கலாநிதி) தில்ருக்ஷி விமலரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், "அவளைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளில் வைத்திய முகாம், 2025 மார்ச் 29 அன்று நடத்தப்பட்டது. இரத்தினபுரி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் குருவிட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த வைத்திய முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வை வழங்குவது நோக்கமாகும்.

இந்த முகாமில் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள், உடல் தினிவு குறியீட்டெண் (BMI) அளவீடுகள் மற்றும் இரத்த சக்கரை சோதனைகள் போன்ற ஏனைய சுகாதார தேவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. கெமுனு ஹேவா படையணி போர்வீரர்களின் 120 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். மேலும் தலைவி ஒரு இராணுவ வீரரின் அங்கவீனமுற்ற தாய்க்கு காலுக்கான நடைபயிற்சி ஊன்றுகோலை நன்கொடையாக வழங்கினார்.

கெமுனு ஹேவா படையணி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.