Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2023 23:42:45 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் கண் மற்றும் விசேட வைத்திய முகாம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் குடும்பத்திற்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கத்துடன், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் கருத்திற்கமைய கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (12 டிசம்பர் ) விஷேட மருத்துவ பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது.

கெமுனு ஹேவா படையணி குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் கலந்துகொண்ட இரு சிகிச்சை முகாம்களிலும் பங்கேற்பாளர்களின் பார்வை குறைபாடுகள் மற்றும் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதிச் செயலாளர் திருமதி பிரியங்கா கலப்பத்தி அவர்களின் ஒருங்கிணைப்பில், திரு. பிரகலித்த புஷ்ப குமார, திரு. பி.சி.எம். சந்திரபால மற்றும் திரு. எல்.டி.எஸ்.டி விக்கிரமதுங்க ஆகியோரின் அனுசரணையில் தகுதியானவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் கபில பிமல் கன்னங்கர இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தார்.