08th August 2023 22:12:19 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் 8 வது கெமுணு ஹேவா படையணியின் படையினர், இரத்தினபுரி முத்துவ கிழக்கு பகுதியில் கனதோல குப்பை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 6) நள்ளிரவு ஏற்பட்ட தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இரத்தினபுரி நகரசபை ஆணையாளர் மற்றும் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோரால் படையினரின் உதவி கோரப்பட்டவுடன், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் படைத் தளபதி ஆகியோர், திங்கட்கிழமை (ஓகஸ்ட் 7) அதிகாலை சம்பவ இடத்திற்கு 8 வது கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியுடன் மூன்று அதிகாரிகள் மற்றும் ஐம்பது சிப்பாய்களை அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் தீ கட்டுப்பாட்டை மீறி பரவியிருந்தது.
அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக பணியில் இருக்கும் படையினரை 611 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்ததுடன், சிறிது நேரத்திற்குள் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை முற்றாக அணைத்தனர்.