Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2023 21:21:25 Hours

கெபிதிகொல்லாவயில் பார்வையற்ற குடும்பத்தின் சேதமடைந்த வீடு படையினரால் புனரமைப்பு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது காலாட் படைப்பிரிவின் 5 வது (தொ) கஜபா படையணியின் சிப்பாய்கள், இராணுவ பொறியியல் சேவைகள் படையணியினருடன் இணைந்து, வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள கெபிதிகொல்லேவ, கலாவெவ பிரதேசத்தில் ஊனமுற்ற குடும்பத்தினரின் வீட்டைப் புனரமைப்பதற்குத் தங்கள் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினர்.

பிறவியிலேயே பார்வையற்ற நிலையில் தாயும் மகனும் தங்கியிருந்த வீடு, பல மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கியமையினால் வீட்டை புனரமைக்க வேண்டியிருந்தது. பெபிலியான ஒட்டோ லங்கா உழவு இயந்திர இறக்குமதி நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு.ஜோகா பெரேரா மற்றும் திரு.சுசந்த ஜயவர்தன ஆகியோரால் வழங்கிய நிதியுதவியிலும் இராணுவத்தினரின் முயற்சியாலும், இத் திட்டம் சாத்தியமானது.

வன்னிப் படையினரின் மனிதாபிமான செயற்திட்டமாக, இராணுவத்தினரின் வழிகாட்டுதலில் பகுதியளவில் சேதமடைந்த வீட்டை புனரமைத்து தந்தை இல்லாத குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை (4) வழங்கப்பட்டது.

62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

5 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டிஎஸ்வைஎல் குருவிட்ட அவர்களின் மேற்பார்வையின் கிழ் சேதமடைந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.