06th November 2024 21:52:20 Hours
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை 05 நவம்பர் 2024 அன்று நடாத்தப்பட்டது. இவ்விரிவுரையை தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலையின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி மேஜர் ஜேஏவீடபிள்யூ ஜயதுங்க அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து நடத்தினார்.
விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.