29th May 2024 18:07:27 Hours
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் படையினரால் 28 மே 2024 அன்று குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை முகாம் வளாகத்தில் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் நிறுவனர் லெப்டினன் கேணல் டிபி ராஜாசிங்க (மறைந்த) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
தேசிய இரத்த மாற்று சேவை - பதுளை கிளையின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.