Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

குருவிட்டவில் முன்னாள் கெமுனு ஹேவா படையினரின் சந்திப்பு

கெமுனு ஹேவா படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (GWESRA) வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) ஞாயிற்றுக்கிழமை (26) குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் (GW) சங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. குருவிட்ட முகாமின் நுழைவாயிலில் முன்னாள் படைவீரர்கள் சங்க GWESRA உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டதுடன், படையணி படைவீரர் நினைவுத் தூபிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு 2009 க்கு முன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உயர் தியாகத்தைச் செலுத்திய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுக்கூட்டம் தொடங்கி மாலை வரை நீடித்தது.

இதற்கிடையில், கெமுனு ஹேவா படையணி முன்னாள் படைவீரர் சங்க தலைவர் பிரிகேடியர் ஹிரன் என் ஹலனகோட் (ஓய்வு) சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலக வளாகத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். கூட்டத்திற்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை சங்க உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

பின்னர், உறுப்பினர்களுக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக மேஜர் ஜெனரல் குலதுங்க ஞாபகார்த்த நீச்சல் தடாக வளாகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான முன்னாள் படைவீரர்கள், நிலையத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.