25th April 2023 18:15:20 Hours
புவி தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 22), யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் யாழ் குருநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
படையினரால் திங்கட்கிழமை (24) முன்னெடுக்கப்பட்ட இச் சமூகப் திட்டத்தில் கடற்கரையோரப் பகுதியில் காணப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று கேன்கள் மற்றும் ஏனைய குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம், கரையோர மற்றும் கடல் வளங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்படை, பொலிஸார், சாரணர் மற்றும் பொதுமக்களுடன் பெருமளவிலான படையினரும் இணைந்திருந்தனர்.
யாழ். மாவட்டச் செயலாளர் திரு. ஏ.சிவபாலசுந்தரன்,யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபீ வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், அரச அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.