19th May 2023 19:27:09 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான விடுதிக் கட்டிடம் வியாழக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதிகாரிகளின் விடுதி வளாகத்தில் நீண்ட நாள் தேவையாக இருந்த 8 அறைகள் கொண்ட கட்டிடம் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
3 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் நிர்மாணப் பணிகள் சில மாதங்களுக்குள் முடிக்கப்பட்டன.
3 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.