25th June 2024 18:59:37 Hours
ஐக்கியம் மற்றும் கலாசார நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக, அம்பாறை வரலாற்றுச் சிறப்புமிக்க மஹிந்த கமனய, அரச அதிபர் அலுவலகம், அரச அதிகாரிகள், இராணுவப் பிரதிநிதிகள், ஏனைய சகோதர சேவைகள், மற்றும் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிழக்கு பொசன் நிகழ்வினால் ஒளியேற்றப்பட்டது. இந்த நிகழ்வு, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் பொசன் மற்றும் மகிந்தகமனையின் முக்கியத்துவத்தை (மிஹிந்து தேரரின் வருகை) அடையாளப்படுத்தியது.
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அம்பாறை நகரத்தின் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கும் வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட 20 விளக்கு கூடுகளை இராணுவத்தினர் வழங்கினர். கிழக்கு போசன் 21 ஜூன் 2024 அன்று தொடங்கியதுடன், இது அனைவரின் இதயங்களையும் கவர்ந்தது.
கிழக்கு பொசன் பௌர்ணமி தினத்தின் விடியலைக் குறிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாப்பிய விகாரையில் பொசன் போயா தினத்தன்று அலோக பூஜை (விளக்கு பூஜை) இடம்பெற்றது. கிழக்கு பொசன் விடியல் பாரம்பரியத்தை பின்பற்றி, அம்பாறை மகாவாப்பிய விகாரையில், புத்த பெருமானின் புனித முடிச்சுவடுகளின் மாபெரும் கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது.
2024 ஜூன் 23 ஆம் திகதி, 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பக்தர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பால் உணவு பூஜையும் நடைபெற்றது.