01st July 2024 18:02:57 Hours
கிழக்கு மாகாண பொசன் தின போட்டி- 2024 அம்பாறையில் 2024 ஜூன் 21 முதல் 26 வரை நடைபெற்றது. போட்டியின் போது 150 பொசன் விளக்கு கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
2024 பொசன் தின போட்டியின் இராணுவ வெற்றியாளர்கள் பின்வருமாறு:
- இலங்கை பொறியியல் படையணி – 1ம் இடம்
- விசேட படையணி – 4ம் இடம்
- 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி – 5ம் இடம்
- அம்பாறை கொமாண்டோ பயிற்சிப் பாடசாலை – 6ம் இடம்
- கெமுனு ஹேவா படையணி தலைமையகம் – 8ம் இடம்
- 24 வது காலாட் படைப்பிரிவு – 11ம் இடம்
கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இப்போட்டிக்கும் விளக்குகளுக்கும் பங்களிப்பை வழங்கியதுடன் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.