13th January 2025 14:34:30 Hours
காட்டு யானைகளால் நெல் வயல்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கும் வனவிலங்கு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கிழக்கு பாதுகாப்புப் படை 2025 ஜனவரி 02 அன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு திம்புலான, மஹாவெலித்தன்ன, சூரியவெவ மற்றும் பராக்கிரம யாய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் 5,000 ஏக்கர் நெல் விவசாய நிலங்களும் 400 குடும்பங்களும் உள்ளனர். கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படையின் திட்ட அதிகாரி பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.ஆர் குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ ஆகியோரின் தலைமையில், அதிகரித்து வரும் மனித-யானை மோதலை நிவர்த்தி செய்வதற்கும் விவசாயம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் நிலையான தீர்வுகளை எடுப்பதற்கும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.