18th February 2024 17:33:55 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், அதிகாரிகளின் நிலை உயர்வு பரீட்சை 2024 க்கான பயிற்சி இந்த ஆண்டு நிலை உயர்வு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் 48 அதிகாரிகளின் பங்குபற்றலுடன் பெப்ரவரி 10 முதல் 16 வரை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையத்தில் நடாத்தியது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் குழு பயிற்சி நிகழ்ச்சியை நடாத்தியது.