Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:35:33 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் பௌத்த மடாலயம் திறந்து வைப்பு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 2 (தொ) இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் வண. அரலகங்வில வஜிர தம்மதீப பிக்குனி அவர்களால் இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலன்னறுவை அரலகங்விலவில் பிக்குனிகளுக்கான புதிய பௌத்த மடாலயத்தை திறந்து வைத்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வெசாக் தினத்தன்று பௌத்த பிக்குனிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரமி அணை' எனும் மடாலயத்தை, தலமை பிக்குனியின் அழைப்பின் பேரில் சனிக்கிழமை (மே 06) திறந்து வைத்தார்.

பிக்குனிகளுக்கான இந்த புதிய மடாலயத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை மணம்பிட்டிய மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. அசோக பலன்சூரிய அவர்கள் வழங்கினார். 12 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 2 (தொ) இலங்கை சமிக்ஞை படையணியின் படையினரால் அந்தந்த கட்டளை அதிகாரிகளான மேஜர் ஆர்எஎஸ்எல் ரணசிங்க மற்றும் மேஜர் கேவீஎ கொடிகார ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் திட்டத்திற்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் வழங்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் திரு அசோக பலன்சூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார தலைமை ஒருங்கிணைப்பாளர் கேணல் எச்எஸ்பீசி அல்பகே, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.