27th March 2023 23:45:33 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த மார்ச் 24 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுரங்கேணிக்குளம் பாடசாலை மற்றும் கிரிமிச்சியோடை பாடசாலை மாணவர்களுக்கு விசேட மதிய உணவுப் பொதிகளைப் வழங்கி வைத்தார்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 6 வது கஜபா படையணியின் படையினர், சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அந்த 200 மதிய உணவுப் பொதிகளை மாணவர்களிடையே விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றினர்.
இந்த மதிய உணவுப் பொதிகளை வழங்கல் நிகழ்வின் போது கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, 23 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி, 6 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரு பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களின் பொருளாதாரச் சிரமங்களை அறிந்து கொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தனது குடும்ப உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்போடு இந்த நலன்புரித் திட்டத்தைத் முன்னெடுத்தார்.