15th July 2024 12:05:07 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் ஒருங்கிணைப்புடன் 4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்பீஐஎச் சேனா நாயக்க அவர்களின் நெருக்கமான மேற்பார்வையுடன், 2024 ஜூலை 12 ஆம் திகதி சித்தாண்டியில், 232 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மாத்தளை கைகாவலை உள்ள ஓமன் லங்கா மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி வதனி மோகன ஷாகர் அவர்கள் இத்திட்டத்திற்கு ரூ. 1.4 மில்லியன் வழங்கியதுடன் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினார் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டதுடன் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக சமூக நலனை ஆதரிக்கும் அதே வேளையில் உள்நாட்டு வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை இது காணப்படுகிறது.