23rd May 2024 18:07:00 Hours
221 வது காலாட் பிரிகேட் படையினர் கிரிஹந்து சேய ரஜமஹா விகாரை வளாகத்தில் 18 மே 2024 அன்று துப்புரவு நிகழ்ச்சியை நடத்தினர். 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்கேஏஆர்பீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
கிரிஹந்து சேய ரஜமஹா விகாரையின் பிரதமகுருவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் 21 இராணுவ படையினர் துப்புரவு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.