Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 10:15:18 Hours

கிரிதலை 2 வது இராணுவ பொலிஸ் படையணியினால் அமைக்கப்பட்ட புதிய விகாரை

மின்னேரியா கிரிதலை குளக்கரையில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களின் கருத்தியல் வழிகாட்டுதலின் பேரில்2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால்'அவுகன' புத்தர் சிலைக்கு அருகில் பானை வடிவிலான (கடாகார) கவர்ச்சிகரமான தூபி ஞாயிற்றுக்கிழமை (14) பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர் மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் பௌத்த அறிஞர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் தங்கள் படைத் தளபதியின் கருத்தை யதார்த்தமாக மாற்றியமைத்த இந்த 'சுதுகல்கந்த மொக்கொல்லான மகா சேய', அரஹன் மொக்கொல்லானவின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முன்னோடியான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு துறவிகள், பக்தர்கள், கிராமமக்கள், அதிகாரிகள், படையினர் மற்றும் இராணுவ பொலிஸ் சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுக்கு மத்தியில் புனித நினைவுச்சின்னங்கள், பெறுமதிமிக்க பொருட்களை தூபியில் பிரதிஷ்டை செய்து, 'பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கலசத்தை திறந்து வைத்தார்.

மகாசங்க உறுப்பினர்கள், கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி, ஒழுக்க பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் என்பீஈஎன் நெரங்கம அவர்கள் முழு திட்டத்தையும் மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தார்.