Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2023 00:30:13 Hours

கின்னலிய வனப்பகுதியின் காட்டுத் தீ படையினரால் கட்டுபாட்டுக்குள்

மாத்தறை மாவட்டத்தின் குருதொட்டகந்த, கின்னாலிய வனப் பகுதியில் புதன்கிழமை (ஒகஸ்ட் 02) காலை ஏற்பட்ட காட்டுத் தீயை ஊருபொக்க பொலிஸ் நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேட்டின் 3 வது (தொ) கெமுனு ஹெவா படையணியின் படையினர் அணைக்க துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தகவலுக்கமைய ஒரு அதிகாரி உட்பட இராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக பரவிய தீயை மூன்று மணி நேரத்திற்குள் அணைக்க துரித நடவடிக்கையை மேற்கொண்டனர். கொலொன்ன பிரதேசத்தின் காப்புக்காடு பகுதியில் ஏற்பட்ட தீயானது ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதற்கு முன்னர் தீ அணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 3 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 613 காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இப்பணியை மேற்பார்வையிட்டனர்.