Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 18:10:23 Hours

காலியில் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், காலி துறைமுகப் பகுதியில் 'டெங்கு' தொற்றுநோயை ஒழிக்கும் நிமித்தம் 14 (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் திங்கட்கிழமை ஜூன் 05 'சிரமதான' பணியை முன்னெடுத்தனர்.

இம் முயற்சியானது துறைமுக ஊழியர்கள், படகு உரிமையாளர்கள், மீன்பிடி மேற்பார்வையாளர்கள், பொது சுகாதார உத்தியோகத்தவர்கள், பொலிஸார் மற்றும் கடலோர காவல் படையினர் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்கள் இணைந்து இச் சிரமதான பணியை மேற் கொண்டனர். இம் முயற்சியானது காலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து காலி துறைமுக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கோரிக்கையின்படி 25 இராணுவத்தினர் இத் திட்டத்தில் இணைந்து டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை கண்டறிந்து அவ்விடத்தில் அகற்றும் நடவடிக்கையில் முக்கிய கவனம் செலுத்தினர்.

இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதுடன், பங்கேற்பாளர்கள் துறைமுக வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தனர். ஏனையவர்களுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம், காலி துறைமுகப் பகுதியில் டெங்கு நோய்க்கு எதிராக நடவடிக்கை படையினரால் மேற் கொள்ளப்பட்டது.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 613 வது பிரிகேட் தளபதி மற்றும் 14 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த சமூகம் சார்ந்த திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினர்.