Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 17:52:23 Hours

காலாட் படை பயிற்சி பாடசாலையில் கற்பித்தல் முறைமை பாடநெறி நிறைவு

அம்பாறை காலாட் படை பயிற்சி பாடசாலையில் 127 சிப்பாய்கள் ‘கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-73ஐ முடித்து கொண்டு 24 ஏப்ரல் 2024 அன்று சான்றிதழ்களைப் பெற்றனர்.

பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் நிறைவுரையை அம்பாறை காலாட் படை பயிற்சி கட்டளை அதிகாரி கேணல் எம்கேஏடி சந்திரமால் அவர்கள் வழங்கினார்.

சுருக்கமான விழாவில் 2 வது விஷேட படையணியை சேர்ந்த கோப்ரல் ஏ.டி.பிரியதர்ஷனாவுக்கு சிறந்த மாணவருக்கான கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.