Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2024 16:15:07 Hours

காலாட் படை பயிற்சி நிலையத்தில் சிப்பாய்களுக்கான படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி நிறைவு

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி - 99 (2024/I) 03 மே 2024 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் நிறைவு பெற்றது.

2024 ஜனவரி 11 ஆம் திகதி 41 சிப்பாய்களின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடநெறி, சில மாத பயிற்சியின் பின்னர் 03 மே 2024 அன்று முடிவடைந்தது. மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது நிறைவுரையில் கலந்துகொண்டவர்களுக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவு மற்றும் ஊக்கத்தை வழங்கினார்.

இந்த விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பாடநெறியின் போது சிறப்பாக செயல்பட்டமைக்காக பின்வருவோர் பாராட்டப்பட்டனர்:

முதலாம் இடம் – விசேட படையணியின் கோப்ரல் எம்.பீ.ஐ.கே ஜெயரத்ன

இரண்டாம் இடம் - கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் எஸ்.பி.எஸ் எதிரிவீர

மூன்றாம் இடம் – விசேட படையணியின் சாஜன் கே.ஏ.சந்தருவன் ஆர்எஸ்பீ