Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2023 17:44:56 Hours

காயமடைந்த போர் வீரர்களுக்கு கலைத் திறன் பற்றிய செயலமர்வு

அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர' நல விடுதி ஐந்து நாடளாவிய ரீதியில் அங்கு வசிக்கும் 11 போர்வீரர்களுக்கு தங்களுடைய படைப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் 'பீங்கான் ஓவியம்' குறித்த இரண்டு நாள் (13 - 14 செப்.)செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.

இக்குழுவினர் முதல் நாள் ரோயல் பெர்ன்வூட் போர்சிலைன் தனியார் நிறுவனத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டதடன், இரண்டாவது நாளில், நிறுவனத்தின் அதிகாரிகள் 'மிஹிந்து சேத் மெதுராவு வந்து செயலமர்வை நடாத்தினர்.

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 'மிஹிந்து செத் மெதுர' தளபதி பிரிகேடியர் டி.எஸ் பாலசூரிய மற்றும் அந்தந்த நல விடுதிகளின் அனைத்து தளபதிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.