03rd October 2023 21:17:44 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவின் மூலம் 01 ஒக்டோபர் 2023 வல்லிபுனம் புதுக்குடியிருப்பு சிறுவர் இல்லத்தில் உள்ள காதுகேளாத மற்றும் பார்வையற்ற பிள்ளைகள் சர்வதேச சிறுவர்கள் தினத்தை கொண்டாடினர்.
இந்நிகழ்வின் போது, விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கான நிகழ்ச்சி நடைபெற்றதுடன், தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிள்ளைகள் மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் சிற்றுண்டிகள், மதிய உணவு என்பவற்றுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு முன்னதாக படையினர் வளாகத்தைச் சுத்தப்படுத்தினர்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் ஆலோசனையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.