Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2024 13:19:50 Hours

காணி மற்றும் விடுதி பணிப்பகத்தின் ஹவாஎலிய புதிய விடுமுறை விடுதி திறப்பு

காணி மற்றும் விடுதி பணிப்பகம் ஹவாஎலியவில் புதிதாக நிர்மாணித்த மூன்று மாடி விடுமுறை விடுதி சனிக்கிழமை (ஏப்ரல் 20 திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் காணி மற்றும் விடுதி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே மதுரப்பெரும ஆர்எஸ்பீ, யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

பின்னர், இராணுவத் தளபதி, மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் பதாகையை திரைநீக்கம் செய்து புதிய விடுதியை திறந்து வைத்தார்.

பின்னர், இராணுவத் தளபதியுடன் அனைவரும் இரண்டாவது மாடிக்குச் சென்றது அங்கு பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றினர். பின்னர் அனைவரும் புதிய விடுதியை பார்வையிட்டனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் மூன்று அறைகள், இணைந்த குளியலறைகள், வரவேற்பறை, சாப்பாட்டு அறை மற்றும் சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 17 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர், பொறியியல் சேவை பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில், இராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான இராணுவ விடுமுறை விடுதிகளை முன்பதிவு செய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் புதிதாக வடிவமைக்கப்பட்ட விட்ஜெட் முறைமையை இராணுவ தளபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 'எனது முன்பதிவுகள்' என்று பெயரிடப்பட்டு 'ஈ போர்ட்டல்' செயலி மூலம் அணுகக்கூடிய இந்த முறைமை, சேவை பணியாளர்கள் உடனடியாக நிகழ்நிலை மூலம் முன்பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

மேலும், புதிய வசதியை நிர்மாணிப்பதில் ஈடுபட்ட இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படையினருக்கு இராணுவத் தளபதி பாராட்டுக் கடிதங்களை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 05 அதிகாரிகள் மற்றும் 55 சிப்பாய்களில் 03 அதிகாரிகள் மற்றும் 17 சிப்பாய்கள் அடையாளமாக பாராட்டுக் கடிதங்களைப் பெற்றனர். மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் தளபதியினால் வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவத் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.