25th July 2023 21:09:37 Hours
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைகளுக்கு முதலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 111 மற்றும் 112 வது காலாட் பிரிகேட் படையினர் கண்டி மற்றும் பதுளை பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தினர்.
11 வது காலாட் படைப்பிரிவின் 111 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினர் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) இரவு கண்டி முல்லப்பிஹில்ல, கலதென்ன பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அதேபோன்று, மறுநாள் (ஜூலை 22) 112 வது காலாட் பிரிகேட் படையினர் பதுளை அலுகொல்ல பிரதேசத்தில் பல ஏக்கர் பயிர்களுக்கு சேதம் விளைவித்த மற்றொரு பெரும் காட்டுத்தீயை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) அளுத்வெல, களுஅம்பதென்ன காட்டுப் பகுதியில் மின்சாரத்தினால் ஏற்பட்ட பெரும் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பரவிய தீயின் காரணமாக கிட்டத்தட்ட 500 ஏக்கர் பயிர்கள் எறிந்து நாசமடைந்தன. அதேபோன்று, ஹக்கலவில் மின்சார கசிவினால் ஏற்பட்ட மற்றுமொரு சிறிய தீ, சில மணித்தியாலங்களில் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதே நாளில், பதுளை பகுதியில் 112 வது காலாட் பிரிகேட் படையினர் அத்தலப்பிட்டிக்கு விரைந்து சென்று இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் மற்றொரு காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையலகுகளின் படையினர் இணைந்து வேகமாக பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை, அப்புத்தளை ஹல்துமுல்ல பிரதேசத்தில் அன்றைய தினம் மாலை மத்திய பாதுகாப்பு படையினரால் மற்றும்மொரு காட்டுத் தீ அணைக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் தளபதிகள் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து விரைவாக செயல்பட்டனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் படையினர் சகோதர சேவைகள் மற்றும் பொலிஸாருடன் கைகோர்த்தனர்.