02nd November 2023 20:35:02 Hours
இலங்கை கவச வாகன படையணியின் கவல்ரி சுப்பர் குரோஸ் - 2023’ போட்டிகள் ஒக்டோபர் 28 - 29 திகதிகளில் முப்படைகள், விளையாட்டு கழகம் மற்றும் வெளிநாட்டு ஓட்டுனர்களின் பங்கேற்புடன் பாங்கொல்ல கவல்ரி சுப்பர் குரோஸ் பாதையில் இடம்பெற்றது.
இலங்கை மோட்டார் போட்டி ஓட்டுநர் சங்கம் மற்றும் இலங்கை கவச வாகன படையணியின் படையினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கவல்ரி சுப்பர் குரோஸ் - 2023’ போட்டியில் மொத்தம் 24 மோட்டார் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பங்குபற்றினர்.மேலும் இலங்கை இராணுவ வீரர்கள் 15 வெவ்வேறு மோட்டார் சைக்கிள் போட்டிகளில் பாராட்டத்தக்க வெற்றிகளைப் பெற்றனர்.
இலங்கை கவசப் வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கவல்ரி சுப்பர் குரோஸ் - 2023 போட்டியை கண்டுகளித்தார்.
இப் போட்டியில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கோப்ரல் பி.ஐ மதுரங்க எஸ்எம் - சுப்பர்மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வில் (போட்டி1 மற்றும் 2) முதலாம் இடத்தையும், இலங்கை சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ குமாரசிங்க ஸ்டன்டார்ட் 250 சீசீ (போட்டி1,2), மற்றும் எம்எக்ஸ் போட்டி 125 சீசீ இரண்டாம் இடத்தையும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எம்.எஸ் கயான் எம்எக்ஸ் - ஸ்டன்டார்ட் 125 சீசீ இரண்டாம் இடத்தையும் 250 சீசீ மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அத்தோடு, இலங்கை சிங்க படையணியின் மேஜர் எ.எ.எல்.என் அதிகாரி அவர்கள் எஸ்எம் - சுப்பர்மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வில் (போட்டி 1) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ காவச வாகன படையணியின் ஓட்டுனர் அதிகாரிகள், மோட்டகுரோஸ் ரசிகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.