19th June 2024 13:57:24 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரிகளின் பயிற்சி நாள் மற்றும் கழக விரிவுரை என்பன 11 ஜூன் 2024 அன்று கவச வாகனப் படையணியின் தலைமையகத்தில் இடம்பெற்றன.
இப் பயிற்சி நாள் இலங்கை கவச வாகனப் படையணி அதிகாரிகளின் அத்தியாவசிய திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்காக ஐந்து கட்டங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் உடற் பயிற்சி மற்றும் அணிநடை பயிற்சியுடன் ஆரம்பமானது.
இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் ஜெனரல்களின் உரைகள் நாளின் சிறப்பம்சமாகும். இந்த அமர்வின் போது, ஏழு மேஜர் ஜெனரல்கள் தங்கள் விரிவான அறிவு மற்றும் அனுபவங்களை இளம் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு மேஜர் ஜெனரலும் அவர்களது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள், முன்னேற்றம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளித்தார்கள் என்பது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.